價格:免費
更新日期:2017-09-28
檔案大小:5.4M
目前版本:2.0
版本需求:Android 4.0.3 以上版本
官方網站:mailto:vengat.android@gmail.com
இந்தியாவின் தொன்மையான இதிகாசங்களில் ஒன்று இராமாயணம் ஆகும். இரகு வம்ச அரசனான இராமனின் கதையைக் கூறுவது இராமாயணம் ஆகும்.(இராம+அயனம் = இராமாயணம்).
இக்கதையை முதலில் வடமொழியில் வால்மீகி, வசிட்டர், போதனார் ஆகிய மூவரும் செய்தனர். தமிழ்மொழியில் இராமகாதையாக வடிவமைத்தவர் கம்பர் ஆவர். கம்பர் எழுதியதால் இக்காப்பியம் கம்பராமாயணம் என வழங்கப்பெறலாயிற்று.
கம்பர் இக்காப்பியத்தை அதன் மூலமான வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். அந்த முயற்சியை ஓர் அறிய உவமையின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். "பசியுடைய பூனை ஒன்று பாற்கடலைக் கண்டு அதை நக்கிக் குடித்துவிட ஆசைக்கொண்டது போல தன் முயற்சியை ஒப்பிடுகிறார்".
கம்பர் இராமகாதையை எழுதுவதற்கு உறுதுணையாக இருந்தவர் சடையப்ப வள்ளல் ஆவார். இதற்கு நன்றி பாராட்டும் விதமாக தனது காப்பியத்தில் ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் வீதத்தில் சடையப்ப வள்ளலைப் போற்றிப் பாடியுள்ளார்.